அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 27.02.2025 அன்று ஒல்லாந்தர் கோட்டை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரத அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார நிகழ்வில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 50 வருடங்களுக்கும் அதிக காலமாக உள்நாட்டு யுத்தம், சுனாமி, வெள்ளம் என ஏற்பட்ட ஒவ்வொரு அவசர கால நிலைமையிலும் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் சுமார் பத்து ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
அ.தவராஜா, க.ரவீந்திரன், த.லெ.ஜவ்பர் கான், எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஏ.எச்.ஏ.ஹுசைன், மு.கௌ.அ.நாஸர், வி.பத்மசிறீ, சி.பாக்கியநாதன் ஆகியோர் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து வழங்கிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது மாவட்ட ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்ட “ஊடகத் தடம்” எனும் விசேட மலர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தயாரித்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவிசெயலாளருமான அ.நவேஸ்வரன், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், தகவல் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










