டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனை பகுதி மக்களுக்கு தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோரின் ஏற்பாட்டில் மகியங்கனை பிரதேச செயலாளர் விமன்சா செனவிரத்னே மற்றும் உதவி பிரதேச செயலாளர் அஷானி விஜேசேகர ஆகியோரின் ஒருங்கிணைப்பில் உலர் உணவுப் பொதிகள் 20.12.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
UNITED METHODIST COMMITTEE ON RELIEF OF GLOBAL MINISTRIES (UMCOR) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சேனானிகம, தம்பரவா, சொரபோரா, கலங்கமுவ, கடந்தாவ, கேபராவ ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 600 பொதிகள் இதன்போது வழங்கப்பட்டன.
இதன்போது அம்கோர் நிறுவன தேசியப் பணிப்பாளர் ப.முரளிதரன், நிறுவன சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், உதவி முகாமையாளர் பிரிஸ்லி ரோய் நிறுவன கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










