பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான ப்ரொவென்ஸ் என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக 16.03.2025 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய கப்பலை வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த DESTROYER ரக ப்ரொவென்ஸ் என்ற போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது.
கப்பலின் கட்டளை அதிகாரியாக Captain Lionel SIEGFRIED பணியாற்றுகின்றார்.
இக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து கொண்டு 20..03.2025 அன்று நாட்டை விட்டு புறப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










