இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் (Anna Bjierde) தலைமையிலான குறித்த குழுவினர் நேற்று நாட்டை வந்தடைந்தனர் இந்த குழுவினர் நேற்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதற்கமைய, உலக வங்கியின் பிரதிநிதிகள், நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇