இலங்கை கடற்படையினர் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மூழ்கியிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்களின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியை மேற்கொண்டனர்.
கொழும்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மூழ்கியிருக்கும் Coal Wreck, Chief Dragon Car Carrier, MV Astoria, MT Nilgiri, Thermopylae Sierra, MV Pecheur Breton, Taprobane East Wreck, SS Worcestershire, Toilet Barge, SS Perseus மற்றும் அடையாளம் காணப்படாத மூழ்கியிருக்கும் கப்பல்களின் சிதைவுகளின் தற்போதைய நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு சுழியோடி பயிற்சியின் போது ஆய்வு செய்யப்பட்ட கப்பல் சிதைவுகள் அனைத்தும் தொல்பொருள் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள கப்பல் சிதைவுகள் ஆகும்.
இந்த சுழியோடி பயிற்சியில் சுழியோடி அதிகாரிகள் பதினான்கு (14) பேர் மற்றும் சுழியோடி மாலுமிகள் பதினைந்து (15) பேரும் பங்கேற்றனர்.
குறித்த கடல் பகுதியில் நீருக்கடியில் கழித்த ஆழம் மற்றும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்வது, டைவர்ஸ் வளிமண்டல காற்று மற்றும் நைட்ராக்ஸ் வாயு கலவை (Atmospheric air and Nitrox air mix) பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் மேம்படுத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆய்வு சுழியோடி பயிற்சிகள் கடற்படை சுழியோடி துறையின் தொழில்முறையை மேம்படுத்தும், வரலாற்று, தொல்பொருள் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள கப்பல் விபத்துக்கள் பற்றிய தகவல்களை புதுப்பித்து, அதன் மூலம் சுழியோடி சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










