நாட்டில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் ஊவா மாகாணத்திற்கும் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இன்று (25.05.2026) நண்பகல் 12.00 மணிக்கு இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய பலத்த இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக உயர்வாகக் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிராபத்துக்கள் மற்றும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளை அவசரமாகப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது:
இடி மின்னல் நிலவும் போது உடனடியாகப் பாதுகாப்புத் தரக்கூடிய கட்டிடங்கள் அல்லது உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேட வேண்டும். எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது.
இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் (குளம், ஆறு) போன்ற திறந்தவெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதையோ அல்லது அங்கு தங்கியிருப்பதையோ முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கம்பித் தொடர்புகளுடைய தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார விநியோக உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










