‘சமய ஒருங்கிணைப்பிற்காக ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சர்வமத குழுக்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுக்கான செயலமர்வு 20.03.2025 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயா நிலையத்தில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா அமைப்பின் ஒருங்கிணைப்பில் தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் மொஹமட் உவைஸ் மதனி தலைமையில் செயலமர்வு நடைபெற்றது.
செயலமர்வில் பிரதேச இளைஞர் சர்வமத குழு, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் பங்கேற்றனர். அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் MIM .ஆஸாத் வளவாளராக கலந்துகொண்டார். வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் திட்ட முகாமையாளர் D.நகுலேஸ்வரன், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் விஜயகாந்த் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
பிரதேசத்தில் ஏற்படுகின்ற சமய ரீதியான இன ரீதியான முரண்பாடுகளை களைந்து ஒரு நிலை பேறான சமாதானம் சுபீட்சம் நிறைந்த நாடாக சமூகங்களுக்கிடையே கொண்டு வருவது எனும் கருத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










