சந்தையில் கராம்புகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் உலர்ந்த கராம்பின் விலை தற்போது 2,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்தோடு கராம்பு பச்சையாக இருந்தால் அதன் விலை ஒரு கிலோவுக்கு 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் துறை அறிவித்துள்ளது
குறிப்பாக கராம்பு பயிர்ச் செய்கை கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கராம்புகளுக்கு அதிக கேள்வி உள்ளதாகவும் அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










