பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மஹாபொல உதவித்தொகை பெறுவோருக்கு அக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் 24.03.2025 அன்று இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன் போது, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மஹாபொல கொடுப்பனவு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை குறைக்க எடுக்கக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஆண்டு மாணவர்களுக்கு மஹாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நீண்ட கால திட்டமாக மஹாபொல உதவித்தொகை பெறுவோருக்கான கணினிமயமாக்கப்பட்ட தரவு முறையை நவீனமயமாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன உள்ளிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் மஹாபொல அறக்கட்டளை நிதியத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects