2025 தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் அக்கரைப்பற்று அல்-முனவ்வறா ஜூனியர் கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவன் இம்ரான் அப்சில் அஹமட் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வம் காட்டி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் இம்மாணவன் வைத்தியர்களான இம்ரான் ரஷீத் மற்றும் ஷிஹாமா ஆகியோரின் மூத்த புதல்வராவார்.
இந்த மாணவனின் இச்சாதனை குறித்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தங்கது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










