தேயிலை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.

இந்தியத் தேயிலை சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு இந்தியா 254 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது

உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் இந்தியா இலங்கையை பின் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் கென்யா இந்தியாவை விட 500 கிலோகிராக்கும் அதிகமான தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் சுமார் 231 மில்லியனுக்கும் அதிகமான தேயிலையை ஏற்றுமதி செய்திருந்தன.

எனினும் 2024 ஆம் ஆண்டில் இந்தியா 24 மில்லியன் கிலோகிராம் தேயிலையை அதிகமாக ஏற்றுமதி செய்து இலங்கையை பின் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான தேயிலை ஏற்றுமதி 7,112 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டை தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் சுமார் 200-225 மில்லியனாக காணப்பட்டன.

இந்த வளர்ச்சியானது 2030 ஆம் ஆண்டுக்குள் தேயிலை ஏற்றுமதி 300 மில்லியன் கிலோகிராமை எட்டும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects