மூன்று மாடி கட்டடத்தை விட உயரமான செயற்கை முடியைத் தயாரித்து நைஜீரியப் பெண் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த ஹெலன் வில்லியம்ஸ் என்ற பெண்ணே இச் சாதனையைப் புரிந்துள்ளார்.
அவர் ஏற்கனவே உலகின் மிக நீளமான செயற்கை முடியை (351.28 மீட்டர்) மற்றும் அகலமான செயற்கை முடியை (3.65 மீட்டர்) ஆகிய சாதனைகளைத் தன்வசம் வைத்திருந்தார்.
தற்போது, 15.37 மீட்டர் (50.42 அடி) உயரமான செயற்கை முடியை தயாரித்து ‘உலகின் மிக உயரமான செயற்கை முடி’ என்ற மூன்றாவது சாதனையைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளார்.
இதனைத் தயாரிப்பதற்காக 250 கட்டு செயற்கை முடி இழைகளை (string hair) அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதன் மொத்த மதிப்பு சுமார் 2,066 அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒரு தொழில்முறை செயற்கை முடி தயாரிப்பாளராக இருந்தும், இந்தச் சாதனை தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக ஹெலன் கூறுகிறார்.
“முதலில் நான் செய்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. செயற்கை முடி நேராக நிற்பது மிகவும் கடினமாக இருந்தது. மீண்டும் வடிவமைப்பை மாற்றி அமைத்த பிறகே என்னால் வெற்றி பெற முடிந்தது,” என்றார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










