மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான மாவட்ட செயற்பாட்டுக்குழுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கே.சந்திரகலாவின் ஒருங்கிணைப்பில் புதிய மாவட்ட செயலகத்தில் 10.02.2026 அன்று நடைபெற்றது.
இதன் போது விசேட தேவையுடையவர்களுக்கான மாவட்ட செயற்பாடுகள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் விசேட கல்வி அலகுகளின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் அவர்களுக்கான சேவைகள், நலன்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான ஒருங்கிணைந்த செயற்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வேலைத் திட்டங்கள் பிரதேசமட்ட விசேட தேவையுடையவர்களின் அமைப்புக்களுடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மனித உரிமை ஆணைக் குழுவின் உயரதிகாரி, கிழக்கு மாகாண சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர், விசேட கல்வி அலகின் இணைப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பிரதேச மட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசேட தேவையுடையவர்களின் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கான நிதி அனுசரணையை புகலிடம் நிறுவனத்தினர் வழங்கினர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










