காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு இன்று (01.04.2025) முடிவு செய்துள்ளது.
காட்டு யானை தாக்குதலால் உயிர் இழந்த அல்லது காயமடைந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
மேலும் சொத்துக்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்த குடும்பங்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம்.
பிரதேச செயலாளரின் அவதானிப்பின்படி, ஒரு குடும்ப அலகு உதவி பெற தகுதியுடையதாக இருக்க வேண்டும், மேலும் தரம் 1 முதல் க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர் தரம் வரை படிக்கும் மாணவர்களை கொண்ட ஒரு குடும்பம் இந்த நிதி உதவியை பெற தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.
விண்ணப்பதாரர் 01.01.2025 அன்று அல்லது அதற்குப் பின்பு காட்டு யானை தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பப் பிரிவாக இருக்க வேண்டும் மற்றும் ஜனாதிபதி நிதியத்தால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட க.பொ.த. உயர்தர புலமைப்பரிசில் திட்டத்தின் பயனாளியாக இருக்கக்கூடாதென குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 1 ஆம் வகுப்பு முதல் 11 வரையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பிள்ளையொன்றுக்காக 3,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திலற்கும், 12 மற்றும் 13 வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திற்கும் இன்று (01.04.2025) முதல் நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










