போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று (11.04.2025) முதல் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் GOV PAY செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிஅமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படும்.
இத் திட்டம் இன்று (11.04.2025) பரீட்சார்த்தமாக 12 இடங்களில் அமுலாக்கப்படவுள்ளன.
அதன் அடிப்படையில், குருணாகல், தோரட்டியாவ, மல்சிரிபுர, கோக்கரல்ல, கலேவல, தம்புள்ளை, மடத்துகம, மரதன்கடவல, கெக்கிராவ, திரிபனே, காவரகுளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் இன்று முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை இணையவழியில் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










