இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (22.04.2025) மதியம் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects