மட்டக்களப்பில் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.04.2025 அன்று இடம் பெற்றது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கென்னும் நிலையங்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects