பிரதான மார்க்கத்திலான புகையிரத சேவைகள் வழமைக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புகையிரதம் தடம்புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் அதனூடான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா புகையிரத நிலையத்துக்கு அருகே கொழும்பிலிருந்து மீரிகம நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்று 23.04.2025 அன்று தடம்புரண்டது.

இதன் காரணமாக பொல்கஹாவெலயில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் புகையிரத சேவை பாதிப்படைந்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த மார்க்கத்தில் தற்போது புகையிரத போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects