முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரசாங்கம் எரிபொருள் விலைகளை குறைத்தாலும் முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என அகில அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், 

எரிபொருள் விலைகள் 30.04.2025 அன்று நள்ளிரவுடன் குறைக்கப்பட்டன.

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டால் முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா? இது குறித்து நாம் பல முறை பேசிவிட்டோம்.

எனவே, முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது குறித்து தனது சங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். 

பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects