முதியோர் தேசிய செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட 07 முதியோர்களுக்கான செவிப்பறை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு 15.12.2023 அன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திருமதி.எச்.எம்.ஹனாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇