நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில்,
கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையிலும், கண்டி, காலி, எம்பிலிப்பிட்டி, புத்தளம், பதுளை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காணப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 42 மற்றும் 62 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காற்றின் தரம் பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான நிலையிலும், கொழும்பு 07, குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










