எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை, ஊவா மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர், மாற்று தினம் ஒன்றில் குறித்த பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்தநிலையில், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார்.