மட்டக்களப்பு மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02.05.2025) இடம் பெற்றது.
மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள், மேம்படுத்த வேண்டிட பயிர் செய்கை நிலங்கள், கைவிடப்பட்ட காணிகளை அடையாளப்படுத்துவதுடன் எதிர்கால மாவட்ட அபிவிருத்திக்கு திட்டங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் இடம் பெறவுள்ளது.
இத் திட்டங்களினுடாக அரச காணிகள் மற்றும் பயன்பாடு அற்ற காணிகளில் இருந்து
உச்ச பயனை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி) பிரதேச செயலாளர்கள், காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களம் உதவி பணிப்பாளர் எஸ். அருள்ராஜா, திணைக்கள தலைவர்கள், காணி பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










