ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள இலங்கை அணி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (05.05.2025) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இலங்கை அணி இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

அத்துடன் குறித்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளதுடன், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முறையே 2 ஆவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

மேலும் பாகிஸ்தான் அணி 5 ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 6ஆவது இடத்திலும் உள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 7 ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் முறையே 8,9 மற்றும் 10 ஆவது இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects