கண்டியின் பல பகுதிகளுக்கு இன்று (28.05.2025) பிற்பகல் 2 மணி முதல் 30.5.2025 அன்று அதிகாலை 2 மணி வரை 36 மணி நேரம், நீர் விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதன்படி, பேராதனை வீதி, வில்லியம் கொபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலிருந்து நகர சபை சந்தி வரை, அஸ்கிரிய, கண்டி குளத்தை சூழவுள்ள பகுதி, ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










