தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது, தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையானது பாராளுமன்ற தேர்தல் முறையை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது பற்றியதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படுவதாயின், அதில் ஒரு அங்கமாக வரும் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் இணக்கம் காணப்பட வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால், வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள், தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் திருத்தத்தை இந்த வரைவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், தேர்தல் முறை திருத்தப்பட்டு, சட்டம் இயற்றப்படும், எல்லை நிர்ணயம் முடிவடையாமல் போகலாம்” என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇