உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ’ஸ்கைப்’ சேவையை வரும் 5 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் அறிவித்திருந்தது.
இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ’ஸ்கைப்’ தளத்தை, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003ஆம் ஆண்டு உருவாக்கினர். தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’ தளம், கடந்த 2011ஆம் ஆண்டு ‘மைக்ரோசாஃப்ட்’ வசம் வந்து சேர்ந்தது.
’விண்டோஸ் லைவ் மெசென்ஜர்’ சேவைக்கு மாற்றாக சுமார் 8.5 பில்லியன் டாலருக்கு ‘ஸ்கைப்’ தளத்தை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் வாங்கியது. இந்த சேவைக்கும் உலகம் முழுவதும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 2023 கணக்கின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்கைப் சேவையை மே 5ஆம் தேதியுடன் நிறுத்துவதாக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் அறிவித்தது. ‘Microsoft Teams’ சேவையில் கவனம் செலுத்தவும், மக்கள் தங்கள் சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவையை மாற்றியமைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










