டுபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று 08.07.2025 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த ஏர் பஸ் ஏ350 விமானம் இரட்டை எஞ்சின்களை கொண்டதாகவும், மேம்பட்ட தொழில்நுட்பங்களோடும், திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும், 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன.
அத்துடன் விமானத்தின் ஐந்து திசைகளிலிருந்து கமராக்கள் உள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதியும், Wi-Fi தொழில்நுட்பமும் உள்ளன.
அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் வழியாக பயணிக்கும்போது தடை இல்லாத இணைய இணைப்பை வழங்கும் வசதியும் உள்ளது.
நீண்ட தூர பயணத்திற்கேற்றவாறு பெரிய குளியலறைகள மற்றும் சிறந்த ஆசனங்கள் ஆகியன உள்ளன.
எமிரேட்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு நான்கு முறை துபாயிலிருந்து இலங்கைக்கு சேவையை வழங்குகிறது.
இலங்கையின் சுற்றுலா இலக்கை அடைவதற்கான எமிரேட்ஸ் விமான சேவையின் ஒத்துழைப்பை இது எடுத்துக்காட்டுகிறது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










