கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பரில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமானது.
இப் பரீட்சையில் 452,979 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 387,648 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,331 தனியார் பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇