மட்டக்களப்பு சிறைச்சாலை முன்பாக நடைபெற்ற ரொட்டி தன்சல் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டு வெசாக் போயா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தன்சல் நிகழ்வு 13-05-2025 அன்று சிறைச்சாலை முன்றலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் வழிகாட்டலிலும், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் சடாட்சரராஜாவின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் கோதுமை மா ரொட்டியும், சம்பலும், அவித்த கொத்தமல்லி பானமும் தானமாக வழங்கப்பட்டன.

சிறைச்சாலை முன்றலில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் பெருமளவான பொது மக்களும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரும் வருகைதந்து உணவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த ரொட்டிகள் அவ்விடத்திலேயே தயாரிக்கப்பட்டதையும், அதனைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்ததுடன் இவ்வாறான தன்சல் நிகழ்வு சிறைச்சாலை நிர்வாகத்தினரால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects