இலங்கையிலுள்ள அனைத்து வாகனக் காப்புறுதி ஆவணங்களையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதிச் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள ‘டிஜிட்டல் காப்புறுதி அட்டை’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து பொதுக் காப்புறுதி மன்றத்தின் தலைவர் தினுஷ திலங்க கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகளை வழங்கும் நடைமுறை முழுமையாக நிறுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலாக, பொதுமக்கள் தமது கைபேசிகள், இணையத்தளத் தளங்கள் மற்றும் கியூ ஆர் (QR) குறியீடுகள் மூலம் அணுகக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் விவரித்தார்.
இந்த புதிய காப்புறுதி ஆவணங்களின் விபரங்களை வாகன உரிமையாளர்களோ அல்லது காவல்துறையினரோ எந்த நேரத்திலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இதற்கென பிரத்தியேகமாக ‘1338’ என்ற துரித இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
USSD குறியீடுகள், குறுஞ்செய்தி (SMS) மற்றும் தானியங்கி குரல் பதில் (IVR) சேவைகள் மூலம் 24 மணி நேரமும் காப்புறுதி விபரங்களை இந்த இலக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










