தெமோதரை நிலையத்துக்கு அருகில் மரம் ஒன்றின் பெரிய கிளை வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த பதுளைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (2) வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (1) இரவு பெய்த அடை மழையினால் தெமோதர ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பெரிய மரம் ஒன்றின் பாரிய கிளையொன்று ரயில் பாதையில் வீழ்ந்ததால் தெமோதரை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும், தெமோதரை ரயில் நிலையத்திலிருந்து வரும் மற்றும் புறப்படும் ரயில்களை இரண்டாவது ரயில் பாதையில் மட்டும் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், இன்று (2) காலை பாதையில் வீழந்து காணப்பட்ட மரக் கிளையை ரயில்வே ஊழியர்கள் வெட்டி அகற்றி பதுளை-கொழும்பு ரயில் போக்குவரத்தை இடையூறின்றி மீண்டும் இயக்க வழிவகை செய்ததாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇