மட்டக்களப்பைச் சேர்ந்த குளோரியன் இரு தங்கப் பதக்கங்களை வென்று தேசிய ரீதியில் வெற்றி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் பரா விளையாட்டு வீரர் செல்வன் ஹேமேந்திரா குளோரியன், 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பரா ஒலிம்பிக் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இரு தங்கப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டிகள் மே மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோமாகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் தேசிய பராஒலிம்பிக் சங்கத்தினால் நடைபெற்றன.

இதில் குளோரியன், குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் வீசுதல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று, இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னரும் 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய பரா ஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டிகளில் குண்டெறிதலில் பதக்கங்களை வென்று தன்னுடைய திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 18 வயதான ஹேமேந்திரா, சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். மெய்வல்லுனர் போட்டிகளுடன் சேர்த்து நீச்சல், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர். இதுவரை பல்வேறு விளையாட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects