நாட்டில் தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 24.05.205 அன்று அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் தாதியர் சேவையின் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
இந் நிகழ்விற்கு இணையாக, தாதியர் சேவையில் 79 விசேட தர அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் நடைபெற உள்ளன.
நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










