உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செலவு அறிக்கை குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (27.05.2025) நிறைவடையவுள்ளது. 

அதன்படி, நாளை (27.05.2025) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அவர்களின் செலவு அறிக்கைகளைத் தனித்தனியே அந்தந்த மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects