உள ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் மாணவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பல்கலைக்கழகங்களில் உள ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் மாணவர்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படியில் , உளவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களை இணைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர், டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும், கடந்த சில மாதங்களில் பதிவான பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந் நிலையில் , இது குறித்து பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர், டொக்டர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects