இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு – பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் , பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைவாக , இத் தேங்காய் பால் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

2025 மார்ச் மாத அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்பு , 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் (கொப்பரா அற்ற) போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த இருப்பு தேங்காய் பால் மா தொழிலுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது, மேலும் இது தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் மற்றும் உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலையைக் குறைக்கும் என்று தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு எதிர்பார்க்கிறது. 

கொழும்பு துறைமுகத்தில் ஆய்வு செய்ய வேண்டிய அனைத்து நிறுவனங்களிடமிருந்தும், தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம், தரநிலைகள் நிறுவனம், தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற்ற பிnpu, இந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு வெளியிடப்பட உள்ளன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த இருப்பினை நாளை (31.05.2025) ஒருகொடவத்தேயில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில், RCT வளாகத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects