சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை வழமைக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடை தொடர்பில் 7,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

மேலும், அவற்றில் 4,684 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது வீழ்ந்தமையினால் அண்மையில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. 

மின்சார விநியோகத் தடை தொடர்பான தகவல்களை 1987 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects