இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார்.

இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், மின்சார சபையின் தலைவராக பணியாற்றிய டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சியம்பலாபிட்டிய கடந்த மே மாதம்11ஆம் திகதி அன்று இலங்கை மின்சாரசபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects