பலாங்கொடை பகுதியில், சிறுவன் ஒருவர், 100 மீற்றர் தூரத்தை 30 செக்கன்களில் கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பலாங்கொடையைச் சேர்ந்த ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் புதல்வரான ஆரோன் சாத்விக் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார். குறித்த சிறுவன் 2 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, பலாங்கொடை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி உள்ளிட்டோர் இந்த சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து, சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇