மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உ.உதய ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் இன்று (04.06.2025) இடம்பெற்றது.

“கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம்” எனும் தொனிப்பொருளில் பெரிய கல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச செயலக வெளிக்கள, கிராம சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும் சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

“பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்” (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 – ஜூன் 5 வரை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects