நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமைப் பயிற்சியாளர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக, தென்னாப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய வோல்டர், இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த நிலையில், தனது ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2025 சாம்பியன்ஸ் கிண்ணத்தில் தென்னாப்பிரிக்காவை அரையிறுதி வரை அழைத்துச் சென்ற இவர், 2024 டி20 உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை அணியை வழிநடத்தினார்.

வோல்டரின் முதல் போட்டித் தொடராக, சிம்பாப்வேயில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டி20 முத்தரப்புப் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா அணியும் கலந்து கொள்ளவுள்ளது.

நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கேரி ஸ்டெட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதை நீட்டிக்காமல் இருக்க நியூசிலாந்து கிரிக்கெட் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects