தனியார் பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டுத் திட்டமொன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து சரக்கு போக்குவரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், ஒரே பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேர அட்டவணையைப் பின்பற்றிச் சேவையில் ஈடுபட வேண்டும் என, அரசாங்கம் விரும்புகிறது.
சில பகுதிகளில் இந்த இரண்டு வகை பேருந்துகளுக்கும், இருவேறு பகுதிகளில் பேருந்து நிலையங்கள் இருப்பதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










