அனைத்து இடைநிலை பாடசாலைகளுக்கும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி எதிர்பார்ப்பு-பிரதமர் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“1000 பாடாசலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி முகாமை அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு 5,000/- வரம்பற்ற தரவு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects