கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், விரிவாக்கல் கற்கைகள் நிலையமும் இணைந்து நடாத்தும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் 2025/2026 கல்வியாண்டுக்கான தொடக்கவிழா நிகழ்வு 19.07.2025 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பூங்கா கேட்போர் கூட மண்டபத்தில் நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் ச.ஜெயராஜாவின் வழிநடத்தலில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அதிதிகளாக பல்கலைக்கழக பீடங்களின் பீடாதிபதிகளும் நிதியாளரும் மற்றும் ஏனைய பல்கலைக்கழக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கற்கைநெறிக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்கள் சார்பாக கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட கலாநிதி. பா.தனபாலன், ந.சச்சிதானந்தன் ஆகியோர் உபவேந்தரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இக் கற்கைநெறிக்கு இம்முறை சுமார் 100 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










