கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதால் விமானங்களும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, நாளாந்தம் சர்வதேச விமான போக்குவரத்து முன்னெடுக்கப்படும் விமான நிலையங்களை அண்மித்த 05 கிலோ மீற்றருக்குட்பட்ட பகுதிகளில் 300 அடிக்கு மேலாக பட்டம் விடுவது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையியல், விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









