மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக மாவட்டம் பூராகவும் உள்ள அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கை கட்டுப்படுத்துவதற்கான சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தினால் பணிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தினைச் சிரமதானம் செய்யும் நடவடிக்கையினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று 09.11.2023 முன்னெடுத்திருந்தனர்.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணனின் தலைமையில் திட்டமிட்டபடி ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இச்சிரமதான பணி இடம் பெற்று வருகின்றது.
தற்போது பருவமழைக் காலம் ஆரம்பித்துள்ளமையால் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் கோட்டை வளாகத்தின் சுற்றுப்புறங்கள், நீர்த்தடாகம், வாவிக்கரைப்பகுதி உட்பட்ட இடங்களில் காணப்படும் நீர்தேங்கும் கொள்கலன்கள் அகற்றும் சிரமதானப் பணிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
3 Responses
முன்மாதிரியான செயற்பாடு.
Hats off Kachchery
Others also should follow same and prevent Dengue outbreak
All Government Institutions take this as an example