இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பான செயலமர்வு 26.07.2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலும் அதனுடைய வரைபுகள், நடைமுறைகள், தண்டனைகள் போன்றவைகள் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆலோசகர் அஷ்வினி நடேசன் மற்றும் போலி செய்திகளை இனங்கானல் தொடர்பில் வளவாளர் யசிகரன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்கள்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்லா டலிமா தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










