அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் நடு செலாவணி வீதம் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் நடு செலாவணி வீதமானது 319 ரூபா 94 சதமாக அமைந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு பின்னர் 320 ரூபாவுக்கும் குறைந்தளவில் இலங்கை ரூபாவின் நடு செலாவணி வீதம் பதிவாகியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇