மட் / மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அமுதவிழா மற்றும் விக்னேஸ்வரா நடைபவனி 05.07.2025 அன்று நடைபெற்றது .
பாடசாலைக் கொடியேற்றம், பாடசாலைக் கீதம் இசைத்தல், அமுதவிழா கவி இசைத்தல், மத குருமார் ஆசியுரை ஆகியன இடம்பெற்றன.
இதன் போது, நடைபவனி பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியியைச் சென்றடைந்து அங்கிருந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
நிகழ்வில், மரணமடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை நினைவுகூரல், அமுதவிழா கேக் வெட்டுதல்,வலயக் கல்விப் பணிப்பாளர்,அதிபர்,முன்னாள் அதிபர் கௌரவிப்பு, க.பொ.த சாதாரணதரத்தில் மற்றும் உயர்தரத்தில் தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









